Tamil Month Rasi Palan Maasi 2013
2013
22
Nov
மதுரை விமான நிலையத்தில் அடிப்படை வசதி வேண்டும்பிரதமருக்கு வைகோ கடிதம்


சென்னை:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தென் தமிழ்நாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் மையமாகத் திகழ்கின்ற மதுரை மாநகரம், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

கல்வியில் சிறந்த மதுரை, அண்மைக்காலத்தில் ஒரு தொழில் நகரமாகவும் வளர்ந்து வருகின்றது. அதனை ஒட்டி அமைந்து உள்ள தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக, வாகன உதிரி பாகங்கள், ரப்பர், வேதிப் பொருள் தொழிற்சாலைகள், கிரானைட் போன்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன.

இவை அனைத்தும், தொலைவில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன. மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் மதுரை விமான நிலையத்தில் வழியாகவே ஏற்றுமதி செய்யப்படுமானால், போக்குவரத்துச் செலவு குறைவும்; கால விரயம் தவிர்க்கப்படும்; ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவு குறையும். மே மாதம் மதுரை விமான நிலையம், சுங்கவரி விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆயினும், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும், இன்றுவரையிலும் செய்து தரப்படவில்லை.

எனவே, மதுரை விமான நிலையம், முழுமையான அளவில் சுங்கவரி விமான நிலையமாக இயங்கிடத்தக்க வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement