Tamil Month Rasi Palan Maasi 2013
2013
15
Jun
பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை ஒசூர் அருகே பரபரப்பு


ஒசூர்:ஒசூர் தாலுகா பேரிகை அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் பாபு (38), பைனான்சியர். மனைவி சுதா (30). காதலித்து திருமணம் செய்து

கொண்ட இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சுதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலபதிக்கும் (24) பழக்கம் ஏற்பட்டு

ஒன்றரை ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த பாபு, சுதாவை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாபு

மாரடைப்பால் இறந்து விட்டதாக அவரது மனைவி சுதா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உறவினர்கள் வந்து பாபுவின் உடலை சொந்த ஊரான நல்லூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தபோது, கழுத்தில் காயம்

இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பாபுவின் உடலை பரிசோதனைக்காக ஒசூர் அரசு

ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சுதாவிடம் உரிய விசாரித்தபோது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்

வெங்கடாசலபதி மற்றும் அவரது நண்பர்கள் ஆஞ்சப்பா (23), முனியப்பா (23), சீனிவாசன் (23) ஆகியோருடன் சேர்ந்து கணவரை கழுத்தை இறுக்கி

கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சுதா, வெங்கடாசலபதி, ஆஞ்சப்பா, முனியப்பா ஆகியோரை நேற்று கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த குருபரப்பள்ளியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டு அருகில் உள்ள

புளியமரத்தில் சீனிவாசன் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இன்று காலையில் இதுபற்றி தகவல் அறிந்த பேரிகை போலீசார்

சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். போலீசுக்கு பயந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement