இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு வளையத்தில் பரமக்குடி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (செப்.11) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி தினத்தையொட்டி குருபூஜை நடக்கிறது. அரசியல் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்த உள்ளனர். கடந்த ஆண்டைப் போல இம்முறை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். டிஐஜி ராமசுப்பிரமணியன் தலைமையில் மதுரை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 15க்கும் அதிகமான எஸ்பிக்கள் பரமக்குடி வந்துள்ளனர். பரமக்குடி 5 முனை சாலை, ஆர்ச் பகுதி, பஸ் ஸ்டாண்ட், இமானுவேல் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/20/2013 3:14:59 PM
-Updated 5/20/2013 3:14:45 PM
-Updated 5/20/2013 2:57:10 PM
-Updated 5/20/2013 2:56:55 PM
-Updated 5/20/2013 2:56:40 PM
-Updated 5/20/2013 2:56:29 PM
-Updated 5/20/2013 2:38:21 PM
-Updated 5/20/2013 2:13:13 PM
-Updated 5/18/2013 12:51:28 PM
-Updated 5/18/2013 12:32:07 PM
-Updated 5/18/2013 12:21:18 PM
-Updated 5/17/2013 3:03:30 PM
-Updated 5/17/2013 3:03:12 PM
-Updated 5/17/2013 3:02:54 PM
-Updated 5/17/2013 2:41:58 PM