Tamil Month Rasi Palan Maasi 2013
2012
08
Sep
பழநி அருகே குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து மகனை கொன்று அப்பாவும் தூக்கிட்டு தற்கொலை


பழநி: பழநி அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கயிற்றால் இறுக்கி மகனை கொன்று விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம் தென்னகரம் தாலுகா ஆரல்குந்தியை சேர்ந்தவர் அரிய கவுண்டர்(40). கண் பார்வை குறைபாடு உடையவர். இவரது மனைவி கோவிந்தம்மாள்(35). இவர்களுக்கு வசந்தா(11), பிரியா(9), முனிச்சாமி(7), செந்தில்(5) என்ற மகன், மகள்கள் உள்ளனர். இவர்களில் முனிச்சாமி நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.  தற்போது அரிய கவுன்டர், மனைவி கோவிந்தம்மாள், மகன் முனிச்சாமி, மகள் பிரியா ஆகியோருடன் பழநி அருகே மானூர் தேவர் நகரிலுள்ள சதீஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கோவிந்தம்மாள் தனது தம்பி கோவிந்தராஜ்க்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். தம்பிக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்குமாறு அரிய கவுண்டர் தனது மனைவியிடம் கூறி வந்தார். இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே நேற்று இரவும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் தூங்க சென்றனர். கோவிந்தம்மாள், மகள் பிரியா ஆகியோர் வீட்டு வாசலிலும், அரிய கவுண்டர், மகன் முனிச்சாமி வீட்டுக்குள்ளும் தூங்கினர். இந்நிலையில் நள்ளிரவில் முனிச்சாமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி அரிய கவுன்டர் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  காலையில் எழுந்த கோவிந்தம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது கணவரும், மகனும் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களை மீட்டு பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,