பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது
9/27/2016 3:25:14 PM
சென்னை, -பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகி, 10க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை மயக்கி படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். சென்னை சிந்தாதிரிபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளம் பெண் ஒருவர், மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையை சேர்ந்த ஷாம்(எ) சாமுவேல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார் என்றும் புகார் அளித்தார். மகளிர் போலீசார், சாமுவேலை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் இளம் பெண்களிடம் பழகி, அவர்களை தனது காதல் வலையில் சிக்கவைத்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் ெநருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சமுவேல் தலைமறைவாகி விட்டார்.
இதன்பின்னர், உயர் அதிகாரிகள் தலையீட்டால் காதல் மன்னன் சாமுவேல் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு சாமுவேலுவை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறியதாவது: மயிலாப்பூரை சேர்ந்த ஷாம்(எ)சாமுவேல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் மயிலாப்பூர் பகுதியில் கல்லூரிக்கு செல்லும் பெண்களை குறி வைத்து காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை தன் காதல் வலையில் சிக்கவைத்து அவரிடம் நெருங்கி பழகி அவருக்கே தெரியாமல் ரகசிய படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சம் பணம் பறித்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர், சாமுவேல் பெற்றோரிடம் பேசி அந்த பெண்ணின் ரகசிய புகைப்படம் மற்றும் வீடியோவை பறிமுதல் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.