டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு
1/26/2021 6:00:48 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் டெல்லியில் குவிந்துள்ளனர்.
இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு போலீசார் அனுமதி அளித்தனர். அதன்படி திக்ரி எல்லையில் இருந்து 63 கி.மீ., சிங்கு எல்லையில் இருந்து 62 கி.மீ., காஜிபூர் எல்லையில் இருந்து 46 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தலாம். பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 பேர் முதல் 5 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லைப் பகுதிகளில் நேற்று முதல் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் குவிந்துள்ளன.
ெடல்லியில் குடியரசு தின விழாக்கள் முடிவுற்றவுடன் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், 3 எல்லைகளிலும் விவசாயிகள் டிராக்டர், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் குவிந்தனர். ஒருசில இடங்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் மோதல் நடந்தது. அப்போது போலீசார் வைத்திருந்திருந்த சாலை தடுப்புகள் உடைக்கப்பட்டன. சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி நடத்தபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஒருபக்கம் குடியரசு தின கொண்டாட்டம் மற்ெறாரு பக்கம் விவசாயிகளின் டிராக்டர் பேரணி என, தலைநகர் டெல்லியே திணறியது.
இதற்கிடையே கடும் பனிமூட்டம் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாது நிகழ்ச்சிகளும், பேரணிகளும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கிய பேரணி கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை, கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும். திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும். காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை 6 மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிராக்டர் பேரணி துளிகள்
* குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் முன்னிைல வகிக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியன் சார்பிலும் வணக்கம் தெரிவிக்கிறேன். இயற்கை சீற்றங்கள், பல சவால்கள், கோவிட் -19 தொற்றுநோய்கள் போன்றவை இருந்தபோதிலும், நமது விவசாயிகள் விவசாய உற்பத்தியைத் தக்க வைத்துக் கொண்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.
* டுவிட்டரில் ‘டிராக்டர்கள் Vs துரோகிகள்’ என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் அகில இந்திய அளவில் டிெரண்டிங் ஆனது. அதில் விவசாயிகள் போராட்டம் குறித்த பதிவுகள் இடம்பெற்றிருந்தன.
* ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ெவளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மோடி அரசாங்கத்தின் உணர்ச்சியற்ற கொள்கைகளால், நாட்டில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண நிலை உருவாகியுள்ளது. அதனால், புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குடியரசு தினமான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என்று ெதரிவித்துள்ளார்.