‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது
6/6/2020 3:17:03 PM
சேலம்: சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். சிவில் இன்ஜினியரான இவருக்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மலையம் பட்டியை சேர்ந்த மெக்கானிக் இன்ஜினியர் அமர்நாத் (27) என்பவருக்கும் கடந்த மார்ச் 26ம் தேதி திருமணம் நடந்தது. புதுமணஜோடி அழகாபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்தனர். அமர்நாத், மாமனார் வீட்டில் தனக்கு கார் வேண்டும் என கேட்டதையடுத்து அவருக்கு பிடித்த கலரில் கார் ஒன்று புக் செய்யப்பட்டது. திருமணம் முடிந்த ஒரு வாரம் சந்தோஷமாக சென்ற வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. இதன்பிறகு ஒவ்ெவாரு நாள் இரவும் புதுமனைவியை அவமானப்படுத்த துவங்கினார். ‘அவளைப்போல நீ இல்லை’ என இன்னொரு பெண்ணை சுட்டிக்காட்டி சித்ரவதைப்படுத்தினார்.
கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மனைவி, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது மெசேஜ்களை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பெண்களுக்கு அனுப்பிய செக்ஸ் மெசேஜ்கள் அதில் இருந்தது கண்டு கண் கலங்கினார்.அவருக்கு தெரியாமல் அவரது செல்போனில் உள்ள மெசேஜ் அனைத்தையும் பிரிண்ட் எடுத்தார். காமரசம் சொட்ட சொட்ட அவர் பெண்களுக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு, அப்பெண்களும் சளைக்காமல் பதில் அளித்திருந்தனர். இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு, முடியை பிடித்து இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் பெற்றோர் சமாதானப்படுத்தினர். என்றாலும் தினமும் அடித்து உதைத்துள்ளார். ‘’இனி உன்னோடு வாழ முடியாது’ என்று அமர்நாத் கூறியுள்ளார்.
இதனால் இளம்பெண், சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து வரதட்சணை கேட்டு ெகாடுமைப்படுத்தியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமர்நாத்தை கைது செய்து சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என தெரியவந்தது.