இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி

3/19/2020 3:54:46 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

புதுடெல்லி: ‘மிகச் சிறந்த வீரர் அவர். ஸ்டெம்புகளுக்கு பின்னால், அவர் அணியின் மிகப் பெரிய சொத்து’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் புகழ்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், இம்மாத துவக்கத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் அவற்றில் 1944 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 11 அரை சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 34.11 ரன்கள். ஓய்வுக்கு பின்னர் ரிலாக்சாக நேரத்தை செலவு செய்வதாக கூறி வரும் வாசிம் ஜாபர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து, தனது கருத்துக்களை ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘தோனி முழு உடல் தகுதியுடனும், நல்ல ஃபார்மிலும் இருந்தால் அவர், ஸ்டெம்புகளுக்கு பின்னால், இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து’ என்று கூறியுள்ளார். மேலும் அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக அவர் செயல்படுவதன் மூலம் கே.எல்.ராகுலுக்கு உள்ள நெருக்கடி தவிர்க்கப்படும். அவரும் ஒரு பேட்ஸ்மேனாக மேலும் பிரகாசிப்பார். தவிர ரிஷப் பன்ட்டையும் கீப்பராக பயன்படுத்தாமல், அணிக்கு இடது கை ஆட்டக்காரர் தேவை என்றால், அவரையும் பேட்ஸ்மேனாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்து, பேட்டிங்கில் லோயர் ஆர்டருக்கு தோனி பலம் சேர்ப்பார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். வாசிம் ஜாபர் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம் பெற வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அணித் தேர்வாளர்களும், பிசிசிஐ நிர்வாகிகளும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகின்றனர். அதே வேளையில் தனது ஓய்வு குறித்து தோனியும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கடைசியாக தோனி 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று ஆடினார். அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆடவில்லை. அக்டோபர் 2019-செப்டம்பர் 2020 ஓராண்டுக்கான பிசிசிஐ அறிவித்துள்ள ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சார்பில் ஆடவுள்ள தோனி, அதற்காக சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஆனால் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது சொந்த ஊரான ராஞ்சிக்கே தோனி திரும்பி விட்டார்.  

மேலும் சில
  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com