இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

6 மாதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலை கண்டுபிடிப்பு... ‘பாண்டி ஜூஸ்’ என்ற பெயரில் பாக்கெட்டு சாராயம் விற்பனை

9/4/2019 3:12:24 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

கும்பகோணம்: குடந்தையில் 6 மாதமாக செயல்பட்டு வந்த சாராய தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். பாண்டி ஜூஸ் என்ற பெயரில் 3 மாவட்டங்களில் பாக்கெட்டு சாராயம் விற்று வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வீதிக்கு வீதி திறந்திருந்தாலும், உள்ளூரில் செல்வாக்கு உள்ள சிலர் அதிகாரிகளை சரிக்கட்டி ஆங்காங்கே சாராய விற்பனையும் தங்கு தடையின்றி சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு கல்லா கட்டி வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால் மக்கள் சாராயம் குடித்து மாண்டுபோவார்கள், அதை தடுக்கவே நாங்கள் டாஸ்மாக் கடையை திறக்கிறோம் என்று ஆளுங்கட்சி சார்பில் வாதம் வைக்கப்பட்டாலும், டாஸ்மாக் சரக்கும், அதற்கு போட்டியாக சாராயமும் விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் (180 மில்லி) 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அடிமட்ட சரக்கின் விலையே 100 ரூபாய் தான். ஆனால் சாராயம் 150 மில்லி 50 ரூபாய், 60 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே ஏழை, கூலி தொழிலாளர்கள் சாராயத்தையே அதிகம் நாடுகிறார்கள். சாராயத்தில் போதையும் தூக்கலாக இருப்பதால் சாராய விற்பனை எல்லா இடங்களிலும் தங்கு தடையின்றி நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 6 மாதங்களாக செயல்பட்டு வந்த ஒரு சாராய தொழிற்சாலையை நேற்று போலீசார் கண்டுபிடித்து அங்கிருந்த சாராயம், அதன் மூலப்பொருட்கள் உபகரணங்களை பறிமுதல் செய்து சாராயம் தயாரித்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு: கும்பகோணம் உதய நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ள சாராயம் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து ஜூஸ் என்ற பெயரில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடந்தை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி இந்த வீட்டை கடந்த சில நாட்களாக இரவு, பகல் என 24 மணி நேரமும் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அந்த வீட்டுக்கு 2 பெண்கள் உள்பட சிலரின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அக்கம், பக்கம் விசாரித்தபோது அங்கு ஜூஸ் கம்பெனி செயல்படுவதாக கூறினர். ஆனால் போலீசாருக்கு அதில் நம்பிக்கை இல்லை. நேற்று அங்கிருந்து 2 கார், 2 பைக் கிளம்பி சென்றது. பைக்கில் சென்றவர்கள் பெரிய பெரிய பைகளை கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை திடீரென குடந்தை தாலுகா போலீசார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு சாராய வாடை வீசியது. உள்ளே உள்ள ஒரு பெரிய ஹாலில் ஏராளமான பேரல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. 2 பெண்கள் பாக்கெட்டுகளில் பேக் செய்து கொண்டிருந்தனர். அதனை எடுத்து பார்த்தபோது அது சாராயம் என தெரியவந்தது. இதையடுத்து, மயிலாடுதுறையை சேர்ந்த சின்னதுரை மகன் ராஜ் (40) அதே பகுதியை சேர்ந்த சேக் மகன் ரபிக் (37) வெளிமாநில சாராய பாக்கெட்டுகளை பேக்கிங் செய்த கும்பகோணம் சாந்தா (40) செல்வி (40) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அங்கு 40 பேரல்களில் புதுச்சேரி மாநில எரிசாராயம் இருந்தது. அவற்றை இங்கு வாங்கிவந்து தண்ணீர் கலந்து பாக்கெட்டுகளில் 150 மில்லி, 200 மில்லி என அடைத்து பேக் செய்து அதில் பாண்டி ஜூலை என வாசகம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து முக்கிய ஊர்களிலும் ஏஜென்சிகள் நியமித்து அவர்களிடம் கொடுத்து கடந்த 6 மாதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தற்போது மதுவிலக்கு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் இந்த சாராய தொழிற்சாலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரித்து வருகிறார்கள்.

பாக்கெட்டு சாராயம் தயாரித்து விற்று கைதானவர்கள் கூறுகையில், ‘‘வாரம் ஒரு முறை காரைக்கால் அல்லது புதுச்சேரி சென்று ஸ்பிரிட் வாங்கிவந்து விடுவோம். பின்னர், அவற்றை சாராயமாக தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தோம். இதற்காக இந்த வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இந்த பகுதி மக்கள் எங்கள் நடமாட்டம் குறித்து புகார் செய்து வந்ததால் போலீசில் சிக்கிகொண்டோம்’’ என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

சாராய ஆலைக்குள் 40 பேரல் ஸ்பிரிட், 2 ஆயிரம் பாக்கெட் சாராயம் (750 லிட்டர்), பேக்கிங் மிஷின், பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் பைகள், 2 கார், 2 பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com