இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாளை 73வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு..தீவிரவாதிகள் அச்சுறுத்தலையடுத்து நாடு முழுவதும் உஷார்நிலை

8/14/2019 3:20:52 PM
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது

சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 73வது சுதந்திர தினவிழா நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மாநகர கமிஷனர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதன் காரணமாக, சென்னை கோட்டை பகுதியை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோட்டை முழுவதும்,  நவீன சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் தினகரன், பிரேம்  ஆனந்த் சின்ஹா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோர் தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இது தவிர, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கம், கேளிக்கை பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில
  • அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்



  • பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து



  • குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது



  • எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1,000 கோடி ஊழல் குறித்து விசாரித்து அமைச்சர் மீது தாமதமின்றி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை எதிரொலி: கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம்



  • வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சரை பயிற்சி மையத்தில் போட சென்றபோது வெடித்தது



  • விபத்தில் படுகாயமடைந்த தம்பதி: காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அமைச்சர்



  • மலைப்பாதையிலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாததால் அவலம்



  • இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை



  • கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com