பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு
8/8/2019 2:47:38 PM
பெரம்பூர்: பீரோவில் நகை, பணம் இல்லாததால் ே்காபத்தின் உச்சிக்கு சென்ற கொள்ளை கும்பல், வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி சென்றுள்ளனர். சென்னை பெரம்பூர், ஜானகிராம் நகர், ஜார்ஜ் காலனியை சேர்ந்தவர் டில்லிராணி (65). அவர் அமெரிக்காவில் மகன்களுடன் வசிக்கிறார். அவ்வப்போது சென்னைக்கு வந்து வீட்டை பார்த்து செல்வாராம். நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள், டில்லிராணியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். அவர்கள் உடனடியாக திரு.வி.க.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அமெரிக்காவில் உள்ள டில்லி ராணிக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து டில்லிராணி வீட்டில் புகுந்த நபர்கள் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக வீட்டின் கதவை உடைத்து புகுந்த கொள்ளையர்கள், பீரோவை திறந்துள்ளனர். அதில் பணம், நகை இல்லாததால் கடும் ஆத்திரத்தில் பீரோவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள பொருட்களை அள்ளிவீசியுள்ளனர். மேலும் கதவு, ஜன்னல்கள், கேட் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.