பிராட்வேயில் இன்று மாலை நடக்கிறது... ஜி.காளன் பிறந்தநாள் விழா
7/11/2019 3:28:26 PM
கீழ்ப்பாக்கம்: தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர், இந்திய தேசிய போர்டு அண்ட் டாக் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய மெட்டல் பெடரேஷனின் துணை தலைவர் உட்பட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் பொறுப்புகளை வகித்தவர் ஜி.காளன். இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் சார்பில், ஜி.காளனின் 55 ஆண்டு பொது சேவைக்கான பாராட்டு மற்றும் 81வது பிறந்தநாள் விழா இன்று மாலை சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி துவக்கி வைக்கிறார். அருள்பிரசாத் தலைமை தாங்குகிறார். ஜெயபால் வரவேற்கிறார். அனந்த ராமகிருஷ்ணன், மூர்த்தி, முரளி முன்னிலை வகிக்கின்றனர். ஏஎம்எம் புவுண்டேஷன் சேர்மன் எம்.வி.சுப்பையா சிறப்பு மலர் வெளியிட, வேஸ்கோ இந்தியா நிர்வாக இயக்குநர் கன்னியப்பன் பெற்றுக்கொள்கிறார். இந்தியா பிஸ்டன் சேர்மன் என்.வெங்கட்ரமணி, சுந்தரம் கிளேட்டன் குரூப் ஆலோசகர் மணிபாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ மனோகரன், எம்.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர். ஜி.காளன் ஏற்புரை நிகழ்த்துகிறார். இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆதிகேசவன் நன்றி கூறுகிறார்.