வேலூர் மத்திய சிறையில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம்
2/12/2019 3:26:01 PM
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக கவனர் முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், 7 பேரின் விடுதலையில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்கக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், நளினி-முருகன் ஆகியோர் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்துவிட்டார்களாம். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நளினி-முருகன் ஆகியோரது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்களது உடல்நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நேற்று அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் உடல் பலவீனமடைய தொடங்கிவிட்டதாக எச்சரித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால், சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.