புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி
2/12/2019 3:20:41 PM
கொச்சி: புரோ கைப்பந்து லீக் போட்டியில், கொச்சி அணி 4வது வெற்றி பெற்றுள்ளது. கொச்சியில், 6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 10வது லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி முதல் 2 செட்களை 15-12, 15-10 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. பின்னர் சரிவில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்ட கொச்சி அணி அடுத்த 3 செட்களையும் 15-11, 15-13, 15-10 என்ற கணக்கில் சொந்தமாக்கி வெற்றியை தக்கவைத்தது. 5 போட்டியில் விளையாடிய கொச்சி அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும். ஆனால், 3 போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.