இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆனைகட்டி அருகே யானை கோவிலில் ‘சின்னதம்பி’யின் நலன் வேண்டி வழிபாடு செய்த மக்கள்

2/12/2019 2:40:41 PM
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை

உடுமலை: சின்னதம்பி யானை நலமுடன் இருக்க வேண்டி ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோவிலில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கோவை ஆனைகட்டி, சின்னதடாகம் பகுதியில் சுற்றி திரிந்து பிடிபட்ட சின்னதம்பி யானை கடந்த ஜனவரி மாதம் 25ந் தேதி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை அங்கிருந்து கிளம்பி உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்தது. அங்குள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை தின்று அட்டகாசம் செய்தது. பின்னர் செங்கழனிபுதூர், மடத்துக்குளம், கண்ணாடிபுதூர் ஆகிய கிராம பகுதிக்குள் சென்று தனது வேலையை காண்பித்தது. கடந்த 11 நாட்களாக அந்த பகுதியில் சின்னதம்பி அட்டகாசம் செய்து வருகிறது. சின்னதம்பியை விரட்ட முதலில் மாரியப்பன், கலீல் ஆகிய 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. மாரியப்பன் திருப்பி அனுப்பப்பட்டு தற்போது கலீலுடன் சுயம்பு என்கிற கும்கி யானை வந்துள்ளது.

நேற்று சின்னதம்பி யானை கண்ணாடிபுதூர் பகுதியில் முகாமிட்டிருந்தது. அங்கு வயல் வெளிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, நெற்பயிர்களை பிடுங்கி சாப்பிட்டது. 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து தேங்காய்களையும், குருத்துகளையும் சாப்பிட்டு ருசித்தது. மதிய நேரம் வயல்வெளியில் படுத்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வயல்வெளிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. தற்போது தினமும் சின்னதம்பி யானையின் சகஜ வாழ்க்கை இதுவாக மாறிவிட்டது. சின்னதம்பி இந்த பகுதியிலேயே உலா வருவதால் அதனை பார்க்க தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களை கண்டு கொள்ளாமல் தன் வீட்டு தோட்டம் போல கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு சின்னதம்பி உலா வருவதால் மக்கள் வந்து கண்காட்சிபோல பார்த்து செல்கிறார்கள். சின்னதம்பி யானைக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது.

கரும்பு, நெல், வாழை பயிர்களை அது சேதப்படுத்தி வரும் சூழ்நிலையிலும் அதனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், சின்னதம்பி யானை நலமுடன் இருக்க வேண்டி ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோவிலில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த பகுதியில்தான் முதலில் சின்னதம்பி யானை உலா வந்து குறும்பு செய்தது. இங்கிருந்துதான் அதனை வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப்பில் விட்டனர். இப்போது உடுமலை பகுதியில் உலா வரும் சின்னதம்பி யானையை என்ன செய்ய போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஆனைகட்டி பகுதி மக்களுக்கு எழுந்துள்ளதால் அவர்கள் இந்த வழிபாட்டை நடத்தி உள்ளனர். இது பற்றி யானை கோவில் பூசாரி பதுவன் கூறும்போது, நாங்கள் கோவிலில் யானை சிலைகளுக்கு படையலிடுவோம். இங்கு முகாமிட்டிருந்தபோது சின்னதம்பி யானை இங்கு வரும் எங்களுக்கு மிச்சம் வைத்து சாப்பிட்டுவிட்டு போ என்று சொன்னால் சென்றுவிடும். அந்த அளவுக்கு பண்புள்ள யானை. அதற்கு தீங்கு ஏதும் நேரக்கூடாது என்று இந்த பூஜையை நடத்தினோம் என்றார்.

மேலும் சில
  • வங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி



  • காவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்



  • சேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை



  • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு



  • உங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு



  • பாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை



  • வாலிபருடன் கள்ளக்காதலா? என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி



  • என்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்



  • சென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு



  • பாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா?: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com