இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி

12/23/2018 2:57:37 PM
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜவா, சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென சுனாமி தாக்கியது. அனாக் கிராகட் பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடிப்பு, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பவுர்ணமியால் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள அனாக் கிராகட் எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டிருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது. இதன் காரணமாகதான் சுனாமி ஏற்பட்டுள்ளது. செராங், பன்டேகிளாங், சவுத் லாம்பங் ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியதில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. சுனாமியால் சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பான்டென் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற தேசிய பூங்கா, கடற்கரை பகுதிகள் அதிக சேதத்துக்கு ஆளாகியுள்ளன. சுனாமியால் 62 பேர் உயிரிழந்தனர். 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

சாலைகள் துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து முடங்கியது. சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுனாமி தாக்கிய பகுதியில் பலரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சுனாமி ஏற்பட்ட பகுதியில் இருந்த ஒருவர் கூறுகையில், “கடற்கரை பகுதியில் நின்றுகொண்டு எரிமலை வெடித்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பியது. அச்சமடைந்த நான் அங்கிருந்து தப்பி ஓடினேன். ராட்சத அலை கடற்கரை பகுதியில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்களின் உதவியுடன் எனது குடும்பத்தினரை மீட்டேன்’’ என்றார். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. இங்கு கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 1.20 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதற்கான நினைவு தினம் அனுசரிக்க இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், சுனாமி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்



  • இந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு



  • பிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி



  • ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு



  • இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்



  • ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு



  • அமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து



  • சட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு



  • அமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி



  • ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com