முன்னாள் எம்பியின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை
7/12/2018 4:19:14 PM
புதுச்சேரி: புதுவை முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான கண்ணன் நேற்றிரவு தனது காரில் காமராஜர் சாலைக்கு சென்றார். காரை அவருடைய டிரைவர் சிவக்குமார் (40) ஓட்டினார். சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கண்ணன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக தெரிகிறது. திருமண நிகழ்ச்சி முடிந்த பின்பு டிரைவர் சிவக்குமார், கண்ணனை அழைத்து வர சென்றார். கண்ணனும் அவரது டிரைவரும் மீண்டும் கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்தனர்.
அங்கு காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு 2 பைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒரு பையில் ரூ.24 ஆயிரம் இருந்துள்ளது.இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.