Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
22
Jun
மாவட்ட திட்டக்குழு கூட்டம் திருவள்ளூர் கலெக்டர் முன்னிலையில் நடந்தது

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர்ட வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அரசு துறைகளில் இந்த ஆண்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் மேலும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறைகளிடம் கலெக்டர் ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘மாவட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு விட்டது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவிகித்துக்கும் அதிகமாக தேர்ச்சி விகிதம் இந்த கல்வி ஆண்டில் நமது மாவட்டம் பெற்றுள்ளது.

 மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடியின் விகிதத்தினை முழுமையான அளவு எய்தும் வகையில் பயிரிட வேண்டும். மேலும், சிறுதானியங்களையும் அதிக அளவில் பயிரிட வேண்டும். காய்கறிகள் வளர்ச்சியினை சந்தை தேவையினை பூர்த்தி செய்யுமளவு அதிகமாக பயிரிட வேண்டும். வேளாண்மை துறையினர் ஈடுபடுவதுடன் அரசு மானியத்தில் வழங்கப்படும் சோலார் மோட்டார்களை விவசாயிகளுக்கு வழங்கிடவும், உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திடவும் செய்ய வேண்டும்’ என்றார்.கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி செயலர் மைதிலி, துணை ஆட்சியர் (பயிற்சி) டி.எஸ்.ராஜசேகர், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement