Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2011
18
May
சம்மர் டூர் : குதூகலம் தரும் கோவை குற்றாலம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவை நகரை ஒட்டி வஉசி உயிரியல் பூங்கா, ஜி.டி. நாயுடு மியூசியம், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

வஉசி உயிரியல் பூங்கா

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே 4.5 ஏக்கர் பரப்பில் உள்ளது. முதலை, மான், ஒட்டகம், நரி, மலைப்பாம்பு, வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட 350-க்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான வவ்வால்கள், கடந்த 20 ஆண்டுகளாக இங்குள்ள 30&க்கும் அதிகமான மரங்களில் உள்ளன. பூங்காவுக்கு செவ்வாய் விடுமுறை. நுழைவு கட்டணம் ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

கோவையில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. கரிகால் சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள நடன மண்டபம் சுற்றுலா பயணிகளை கவரக்கூடியது. மண்டபத்தில் உள்ள எட்டு தூண்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் கல் சங்கிலி, சுழலும் தாமரை ஆகியவை வரலாற்று சிறப்புடையவை.  கோவை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில் பிரசித்தி பெற்றவை.

ஜிடி நாயுடு மியூசியம்

கோவை - அவிநாசி ரோடு அண்ணாசிலை அருகே உள்ளது. அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவின்  அறிவியல் கண்டுபிடிப்புகள், பழங்கால வாகன உதிரிபாகங்கள், பஸ், கார், ஜீப் மற்றும் 2&ம் உலகப்போர் காலத்திய பல நாடுகளை சேர்ந்த வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பூண்டி வெள்ளியங்கிரி கோயில்

கோவையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. அடிவாரத்தில் உள்ள கோயிலில் முருகனை தரிசிக்கலாம். அடிவாரத்தில் இருந்து 5 மலைகளைக் கடந்து 6 ஆயிரம் அடி உயரமுள்ள 6&வது மலையான கிரிமலையில் ஏறி பஞ்சபூத லிங்கத்தை தரிசிக்கலாம். மலையில் ஏற இளைஞர்களுக்கு 4 மணி நேரம், மற்றவர்களுக்கு 6 முதல் 8 மணி நேரம் ஆகும். இரவில் ஏறினால் களைப்பு தெரியாது. மறுநாள் மதியத்துக்குள் திரும்பிவிடலாம். பெண்களுக்கு அனுமதியில்லை. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜகி வாசுதேவ் நிறுவிய ஈஷா யோகா மையம் உள்ளது. 14 அடி உயர தியானலிங்கம் இங்கு உள்ளது.

கோவை குற்றாலம்

கோவையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளது. மலைகளுக்கு இடையே ரம்மியமாக அமைந்த அருவியில், வழிந்தோடும் பாதையில் என 3 ஆயிரம் பேர் வரை குளிக்கலாம். வாட்ச்டவர், தொங்குபாலம், வேங்கை மரக்காட்டில் உள்ள மரவீடு, சாடியாறு அருவி, பூண்டி வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையான கிரிமலை, சிறுவாணி மலைச்சாரலை காணலாம். கோவையில் இருந்து சாடிவயல் வரை அரசு பஸ் செல்கிறது. அங்கிருந்து அரை மணி நேரம் நடந்தால் கோவை குற்றாலத்தை அடையலாம். வனத்துறை கட்டணம் ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10. திங்கள் கிழமை விடுமுறை. மே மாதத்தில் குறைவாக தண்ணீர் கொட்டும்.

பெதஸ்தா மண்டபம்

சிறுவாணி அணை செல்லும் வழியில் கோவை காருண்யா பல்கலை வளாகத்தில் பெதஸ்தா மண்டபம் உள்ளது. இங்கு பெதஸ்தா குளம் மற்றும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சிலைகள் உள்ளன. மண்டபத்தில் வழிபாடு நடத்தலாம். குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள் உள்ளன.

சிறுவாணி அணை

கோவையில் இருந்து 37 கி.மீ தூரத்தில் உள்ளது. 27 கி.மீ தூரமுள்ள அடிவாரம் வரை பஸ் வசதி உள்ளது. பின்னர் அங்கிருந்து அணைக்கு சொந்த வாகனத்தில் செல்லலாம். உலகின் சுவையான நீர்களில் ஒன்றான சிறுவாணி நீர், கோவைக்கு குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையம், அடர் பசுமை நிறைந்த வனப்பகுதியில் 14.5 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள அணை, அங்கு முக்தியாறு, பட்டியாறு, வெள்ளிங்கிரி ஓடை, சிறுவாணி ஓடை ஆகியவற்றை காணலாம். மான்கள், காட்டெருமைகள், யானைகள் கூட்டம் கூட்டமாக அணைக்கு நீர் அருந்த வருவதை காணலாம். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வனத்துறை பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அணை கேரளாவிலும், அணை வரையிலான வனப்பகுதி தமிழகத்திலும் உள்ளதால், அணைக்கு செல்ல இரு மாநில வனத்துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். கோவையில் இருந்து கேரளா பாலக்காடு, மன்னார்காடு வழியாக சிறுவாணி அணைக்கு செல்ல அனுமதி பெற தேவையில்லை.

மருதமலை

கோவையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. அடிவாரத்தில் இருந்து 900 படிக்கட்டுகள் உள்ள கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். பஸ்சிலும் செல்லலாம். இங்குள்ள பாம்பாட்டி சித்தர் சன்னதியில் அமர்ந்து தியானிக்கலாம். கோவை நகரின் அழகை மலையில் இருந்து பார்க்கலாம்.

வைதேகி அருவி

கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள வனப்பகுதியில் உள்ளது. தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்பதுதான் ஒரிஜினல் பெயர். ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டதில் இருந்து சுருக்கமாக, செல்லமாக ‘வைதேகி அருவி’ என்று அழைக்கப்படுகிறது. கோவையில் இருந்து நரசீபுரம் வரை பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து 5 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடக்க வேண்டும். போளுவாம்பட்டி வனச்சரகரிடம் அனுமதி பெற வேண்டும். யானைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுவாக அனுமதி வழங்கப்படுவதில்லை.

பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலா

கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.

வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம். மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.

அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.

ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
murugan - erode
7/18/2012 -- 13:13:53

அழகாக உள்ளது.

can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement