Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2011
08
May
கருப்புக்கு கோபம் வந்தா ஊரு தாங்காதுப்பா....

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

‘‘கோட்டக் கருப்புசாமி நோம்பு தொடங்கிடுச்சு.. யாரும் கோக்குமாக்குத்தனமா ஏதும் பண்ணிப்புடாதீங்க.. அப்புறம் சாமிக்கு கோபம் வந்துச்சு.. தாங்க மாட்டீங்க.. ஊரும் தாங்காது.. எல்லாம் உங்க நன்மைக்கும் ஊர் நன்மைக்கும்தான் சொல்றோம். ஜாக்கிரதை... ஜாக்கிரதை’’  இப்படி ஒரு எச்சரிக்கை குரல் அந்த கிராமத்தில் ஓங்கி ஒலிக்கும். இதை சாதாரண தண்டோரா குரலாக யாரும் கருத மாட்டார்கள். தெய்வ வாக்காகவே ஆகிவிடும். யாரும் தப்பித்தவறி கூட கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள். அப்படி மீறியவர்கள் அனுபவித்த அவஸ்தைகளின் கதைகள் அதிகம்.
எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள், அதை மீறியவர்களுக்கு கோட்டக் கருப்புசாமி கொடுத்த தண்டனைதான் என்ன, சம்பிரதாயங்களை மீறினால் சாமிக்கு ஏன் கோபம் வருகிறது என்பதெல்லாம் இன்னும் விளங்காத மர்மமாக கிராம மக்களுக்கு இருக்கிறது.

 கோட்டக் கருப்புசாமி பண்டிகை தொடங்கிவிட்டாலே ஊருக்குள் மயான அமைதிதான். சங்கிலியால் பிணைக்கப்பட்ட கோட்டக் கருப்பு ஆவேசமாக நள்ளிரவில் வேட்டைக்கு கிளம்புவதை உச்சகட்டமாக கூறலாம். அப்போது தப்பித்தவறி யாராவது எதிர்பட்டு விட்டால் அவர்கள் கதி, அதோ கதிதான். இந்த பண்டிகையில் பங்கேற்பவர்கள் லுங்கி கட்டக்கூடாது. பண்டிகை முடியும்வரை ஊருக்குள் நுழையும் வாகனங்களில் விளக்கு எரியக்கூடாது ஊருக்குள் ஒலிபெருக்கி போடக்கூடாது, வீட்டில் டி.வி போடக்கூடாது. வெளியூருக்கு சென்றால் கிராமத்தினர் யாரும் இரவில் தங்கக்கூடாது. இருட்டுவதற்குள் ஊருக்கே வந்துவிட வேண்டும். கருப்புசாமி வேட்டைக்கு செல்லும்போது பிராணிகளோ, மக்களோ குறுக்கே செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகளை அடுக்குகின்றனர். கன்னங்கரேலென்று இருக்கும் ஆட்டைதான் சாமிக்கு பலி கொடுப்பர். சாமிக்கு நேர்ந்து விடும் ஆட்டை திருடிச் சென்று சமைத்து சாப்பிட்டால், மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்று மிரட்டுகின்றனர் கிராம மக்கள்.

 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிப்பட்டி கிராமம். அங்குள்ள காட்டுக்குள்தான் கோட்டக் கருப்புசாமி கோயில் உள்ளது. குதிரையில் அமர்ந்தபடி 10 அடி உயரத்தில் கையில் அரிவாள், துப்பாக்கியுடன் நிற்கும் கோட்டக் கருப்புசாமியை பார்த்தாலே குலைநடுங்கும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இங்கு பண்டிகை நடக்கும்.  
 ஆகாய பூஜை நடுநிசியில்தான் துவங்கும். பன்றிக்குட்டி ஈரல், உப்பு பொங்கல், சக்தி கிடா மூன்றையும் மண் கலயத்தில் செய்து இரவு பூஜையில் படைத்து பக்தர்களுக்கு தருவார்கள். இந்த வைபவத்தை யாரும் படம் பிடிக்க முடியாது. திருட்டுத்தனமாக கேமராவை கிளிக் செய்தாலும் படம் விழாதாம். இதை உறுதிப்படுத்துவதுபோல ‘கிழக்குச்சீமையிலே’, ‘கருத்தம்மா’ படங்களை இயக்குனர் பாரதிராஜா இங்கு எடுக்க வந்தபோது படம் பதிவாகவில்லை என்ற பேச்சும் உலவுகிறது.

இரவு முழுவதும் பூஜை நடக்கிறது. பூஜை துவங்குவதற்கு முன்பு 2 மணி நேரம் ஊரில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படுகிறது. அந்த இருட்டை கிழித்துக் கொண்டுதான் சங்கிலியால் உடல் முழுவதும் இறுக்க கட்டியபடி வேட்டைக்கு கிளம்புவார் கோட்டக் கருப்பு.  நோன்பு சாட்டுவதற்கு 15 நாள் முன்பு அரை கி.மீ. தொலைவில் இருக்கும் சாவடியில் நேர்த்திக்கடன்களை பெண்கள் செலுத்துவர். சாமி சாட்டுவதற்கு 15 நாளுக்கு முன்பிருந்தே ஊருக்குள் யாரும் இரவில் விளக்கு போட மாட்டார்கள். பண்டிகை நேரத்தில் ஊருக்குள் வந்து செல்லும் பஸ் டிரைவர்களிடமும் முகப்பு விளக்கை அணைக்குமாறு கிராமத்தினர் கேட்டுக்கொள்வர். அதையும் மீறி விளக்கை எரிய விட்டுச்சென்ற ஒரு டிரைவர், விபத்தில் சிக்கி 2 கால்களை இழந்த சம்பவமும் நடந்துள்ளது. இன்றைக்கும் கருப்புசாமி பண்டிகை தொடங்கிவிட்டால் ஊருக்குள் கிலியும் பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.   நாச்சிபாளையம் கே.பூபதி

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
P.T.MURUGAN - TRICHY
5/8/2011 -- 18:3:23

கருப்பசாமிக்கு, கருப்பு கலர் என்றால் உசிரு. இருட்டு, அதை விட அவருக்கு பிடிக்கும். இதெல்லாம், நம்ம பெருசுகள் சொல்லி வைத்த கதை. கருணை வடிவான கடவுளுக்கு , எதற்கு கொலை வெறி? வேட்டையாடுவது , இப்போதெல்லாம் நடக்காத சங்கதி. வனத்துறை உஷாராக இருக்கிறது.பக்த கொடிகளே, சாய் பெயரை கெடுக்காதீர்கள். மதுவும், மாமிசமும் தேவை என்றால், முனியாண்டி விலாஸ் பக்கம் போகலாமே.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

karuppusami - thirukkonam
6/15/2012 -- 14:54:50

கோட் கருப்புசாமி மிகவும் அமதியான வீரமுள்ள விவேகமுள்ள கூர்மைதிரனுள்ள அன்புள்ள கடவுள்.இவருக்குபக்தர்களையும் பொதுமக்களும் பாதுகாக்கும் குணம் உள்ளவர்,நேர்மை,நீதி தர்மம் அடக்கம் உள்ளவர் அனால் அதர்மங்களுக்கு எதிரானவர்.அன்புக்கடவுள்.

can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement