Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
15
Feb
தமிழகத்தின் 11வது மாநகராட்சியாகிறது திண்டுக்கல் முதல் மேயர் மருதராஜ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட தலைநகராக உள்ளது. 149 ஆண்டுகளை கடந்த சிறப்பு நிலை நகராட்சியாக திண்டுக்கல் திகழ்கிறது. அடுத்த ஆண்டில் நகராட்சி 150வது ஆண்டு விழா காண உள்ளது. 48 வார்டுகளை கொண்ட நகராட்சியின் மொத்த பரப்பளவு 14.01 சதுர கிலோ மீட்டர். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2.15 லட்சம். தற்போது சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆண்டு வருமானம் சுமார் ரூ.50 கோடி.

மாவட்டத்தின் தலைநகராக இருப்பதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்நகரம் பூட்டு தொழிலுக்கு பெயர் பெற்றது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், கல்லு£ரிகளும் ஏராளமாக உள்ளன. இந்த நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மாநகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் புறநகர் பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சென்னம நாயக்கன்பட்டி, பள்ளபட்டி, சீலப்பாடி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 9 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கலெக்டர், எஸ்பி அலுவலகங்கள் மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன. 9 கிராம பஞ்சாயத்துக்கள் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் 96.5 சதுர கி.மீட்டர் எல்லையின் பரப்பளவு விரிகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகரை மாநகராட்சியாக அறிவித்து கடந்த வாரம் அரசாணை வெளியானது.

இதுவரை நகராட்சி தலைவராக இருந்து வந்த அதிமுகவை சேர்ந்த மருதராஜ், முதல் மேயராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நகராட்சி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாமன்ற கூட்டத்தில் மேயர் பங்கேற்கும் போது அவர் அணிந்து வர கருப்பு மற்றும் சிவப்பு கலரில் 2 அங்கிகள், அவர் அமருவதற்காக புதிய நாற்காலி தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 110 பவுனில் டாலர் செயினும், சுமார் 7 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கோலும் தயாரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாளில் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 10 மாநகராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் திண்டுக்கல் 11வது மாநகராட்சியாக முறைப்படி உதயமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement