Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
11
Jan
சோலார் பேனல் மோசடியில் கைதான சரிதா நாயருக்காக சிறையில் மேக்கப்மேன் நியமனமா? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் மேக்கப்புடன் வருவதால் அவருக்கு சிறையில் மேக்கப்மேன் நியமித்துள்ளீர்களா என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது இரண்டாவது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சரிதாவுடன் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர் பென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம்ராஜ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். உம்மன் சாண்டிக்கும் மோசடியில் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சரிதா நாயர் மீது திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று கொச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஆரூண் அல் ரஷீத், அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

கைதான சரிதா நாயர் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது வீட்டில் இருந்து வருவது போல் மேக்கப் போட்டு விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வருகிறார். அவருக்கு சிறையில் மேக்கப் போட அழகு கலை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளரா? சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் ஏதும் செய்யப்பட்டுள்ளதா? விலை உயர்ந்த சேலைகள் எங்கிருந்து கிடைக்கின்றன? இந்த செயல்களை வைத்து பார்க்கும் போது ஆட்சியாளர்களுக்கும், மாபியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது என கூறினார். அப்போது அரசு வக்கீல் பதில் கூறுகையில், ‘சரிதாவுக்கு சேலைகள் வீட்டில் இருந்து வருகின்றன. சோலார் பேனல் மோசடி மூலம் கிடைத்த பணத்தில் ரூ.13 லட்சத்திற்கு அவர் சேலைகள் வாங்கி வைத்துள்ளார்’ என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி ஆரூண் அல் ரஷீத், அவற்றை ஏன் கைப்பற்றவில்லை? குற்றம் செய்தவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறையில் குற்றவாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பது போல் உள்ளது’  என்று போலீசாரை கண்டித்தார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement