Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
14
Jun
க.காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி கழுத்து இறுக்கி கொலை காதல் மனைவி, காதலன் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட் டம் பேரிகையில் உள்ள அங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பாபு (38), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (30). காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 8 மற்றும் 5 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (24), தச்சு தொழிலாளி. இவருக்கும் சுதாவுக்கும் கள்ளக் காதல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பாபு, மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் நேற்று இரவு 9 மணிக்கு பாபு தூங்கி கொண்டிருந்த போது, சுதா போன் செய்து கள்ள காதலன் வெங்கடாசலபதியை வீட்டுக்கு அழைத்தார். அவரும் தனது நண்பர்கள் சீனிவாசன் (24), ஆஞ்சப்பா (23), முனியப்பன் (23) ஆகியோரை அழைத்து கொண்டு சுதா வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாபுவின் கை கால்களை, வெங்கடாசலபதியின் நண்பர்கள் 3 பேரும் அழுத்தி பிடித்து கொள்ள, வெங்கடாசலபதியும், சுதாவும் தலையணையால் முகத்தில் அமுக்கி உள்ளனர். இதில் மூச்சுத் திணறி பாபு மயங்கிய நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் வெங்கடாசலபதியும், அவரது நண்பர்களும் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை தனது கணவர் நெஞ்சுவலியால் துடித்து இறந்து விட்டதாக கூறி சுதா நாடகமாடி உள்ளார். இதுபற்றி பாபுவின் தம்பி மற்றும் குடும்பத்துக்கு சுதா போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் வந்து, பாபுவின் உடலை அடக்கம் செய்ய, நல்லூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
அங்கு இறுதி சடங்கு செய்த போது பாபுவின் கழுத்தில் தழும்பு இருந்ததால் சந்தேகம் அடைந்த பாபுவின் தம்பி மஞ்சுநாத், பேரிகை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) தணிகாசலம், ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், சூளகிரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சுதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து சுதா, வெங்கடாசலபதி, ஆஞ்சப்பா, முனியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement