Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
16
May
மாட்டு வண்டிகளில் 3 ஆயிரம் பேர் குல தெய்வம் கோயிலுக்கு பயணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 56 கிராமங்களைச் சேர்ந்த ஒரே சமுதாய மக்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயிலில் வைகாசி மாதம் குல தெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நடக்கும் இந்த விழாவில் 56 கிராம மக்கள் 3 நாட்கள் தங்கியிருந்து கலந்து கொள்வர். இதற்காக மாட்டு வண்டிகளில் குடும்பம், குடும்பமாக அங்கு செல்வது வழக்கம். இந்தாண்டு விழா நாளை மறுநாள் (மே 18) துவங்கி 3 நாள் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அபிராமம் அருகே அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டனர்.

கமுதி கோட்டை மேடு, மண்டபசாலை, கல்லூரணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக 80 கிமீ தூரம் கடந்து எம்.புதுப்பட்டிக்கு செல்கின்றனர். நாளை அதிகாலை அவர்கள் கோயிலை சென்றடைகின்றனர். இது குறித்து கிராமத்தினர் கூறுகையில்,‘ கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக மாட்டு வண்டிகளில் கூடமுடைய அய்யனார் கோயில் சென்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாள் விழா கொண்டாடுகிறோம். விழாவிற்கு சென்று திரும்ப மொத்தம் 10 நாட்களாகும்‘ என்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement