Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
23
Apr
துறவி போல வாழ்கிறேன்: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: அரசியலில் பற்றற்ற துறவிபோல வாழ்ந்து வருகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசினார்.  
சட்டசபையில்  இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் பேசியதாவது:
தீட்டப்படாத வைரத்தை தீட்டினால்தான் ஒளி ஏற்படும். அதேபோல், காவல்துறையும் சரியாக நடத்தினால், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.  சமீபத்தில் டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் நமது முதல்வர் கலந்து கொள்ளவில்லை. காரணம் முதல்வர்களுக்கே டெல்லியில் பாதுகாப்பு இல்லை. முதல்வர் ஜெயலலிதா: டெல்லியில் நடந்த கூட்டத்தில் 7 மாநில முதல்வர்கள்தான் கலந்து கொண்டனர்.  டெல்லியில் உள்ள முதல்வரே கலந்து கொள்ளவில்லை.

பண்ருட்டி ராமசந்திரன்: மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் பரவாவில்லை. உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும். (அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.) பண்ருட்டி ராமசந்திரன்: இங்குள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் நல்லவர்கள். ஆனால், இருக்கும் இடம் தான் சரியில்லை. ரங்கராஜன்(காங்கிரஸ்): சரியான இடத்தில்தான் இருக்கிறோம். பண்ருட்டி ராமசந்திரன்: ராஜாஜி முதல் காமராஜர் வரை காங்கிரசுக்கு உழைத்தார்கள். ஆனால், அவர்களால் கடைசி வரையில் காங்கிரசில் இருக்க முடியவில்லை.  முல்லைபெரியாறு, காவிரி நதிநீர் பிரச்னைக்காக மக்கள் போராடி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா: முல்லைபெரியாறு, காவிரி பிரச்னையில் மத்திய அரசு நம்மை வஞ்சித்தாலும், நீதிமன்றங்கள் மூலம் போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

பண்ருட்டி ராமசந்திரன்: ராமேஸ்வரம் மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை ஆகியவற்றில் மத்திய அரசு வெளியுறவு கொள்கையை சரியாக கடைபிடித்திருந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து இருக்காது.  சென்னை புளியந்தோப்பில், ரமணி என்ற பெண் சப்&இன்ஸ்பெக்டரிமே 12 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். படித்தவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். விசாரணை கைதிகளின் சாவு குறைக்கப்பட வேண்டும். கொலை, குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா:  கொலை என்பது திடீரென ஏற்படும் உணர்வுகளால் ஏற்படுவது. போலீசாரால் அதை தடுக்க முடியாது. ஆதாய கொலைகள் மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும். ஆதாய கொலைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.

பண்ருட்டி ராமசந்திரன்: சிபிசிஐடி போலீசாரை பலப்படுத்தவேண்டும். கூலிக்கு கொலை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்கட்சிகள் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: அரசியலில் ஒரு பற்றற்ற துறவி போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் மோசமாக பேசியவர்கள் மீதுதான் அந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் கட்சிக்கு தலைவராக இருப்பவர்கள் நா காக்க வேண்டும். எங்கே பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது. என்னை பற்றியோ, எனது அமைச்சரவை பற்றியோ பேசினால் அது என்னை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களை பற்றி பேசியதுதான். பொதுவாழ்வில் நிதானம், ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்க வேண்டும். எதிர்கட்சி துணை தலைவர் எனக்கு யோசனை கூறுவதை நிறுத்தி விட்டு, யாருக்கு அறிவுரை கூற வேண்டுமோ, அவருக்கு அறிவுரை கூறவேண்டும்.

பண்ருட்டி ராமசந்திரன்: எங்களது உறுப்பினர் அருண் சுப்பிரமணியன் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: அருண் சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு புகாரில் யார் சிக்கினாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவவாறு விவாதம் நடந்தது.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement