Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Apr
மாவோயிஸ்ட் தீவிரவாதி கோவையில் அதிரடி கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவை: மேற்கு வங்கத்தில் துணை ராணுவ படை முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 29 ராணுவ வீரர்களை கொன்று தப்பிய மாவோயிஸ்ட் தீவிரவாதியை கோவையில் இன்று அதிகாலை கியூ பிராஞ்ச் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த போது அவர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம், அனிமன்கோன் கிராமத்தை சேர்ந்தவர் சாம் சரண்(27). Ôரன்வீர் சேனாÕ என்ற மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்.

இவர், 2008 மே 26ம் தேதி மேற்கு வங்கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரை கொலை செய்து தலைமறைவானார். அந்தாரிதோல் கிராமத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள துணை ராணுவ படை முகாம் மீது 2010 பிப்.15ம் தேதி 40 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், 29 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சாம் சரண். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.சாம்சரண் மீது 9 பிரிவுகளின் கீழ் மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 40 மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களை நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். மும்பை, டெல்லி, பெங்களூர்,

8 கொலையில் தொடர்பு

கோவையில் கைதான மாவோயிஸ்ட் தலைவன் சாம்சரண் மீது டெல்லி, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மாவோயிஸ்ட்களை தப்பிக்க வைத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. பின்னர் அங்கிருந்து தப்பிய இவர், கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் தமிழகம் வந்துள்ளார். ஏஜென்ட் உதவியுடன் கடந்த பிப்.28ம் தேதி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஹெல்பராக சேர்ந்துள்ளார். அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார்.இவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாது. பெங்காலியில் தான் பேசுகிறார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. செல்போனில் யாருடனோ அதிக நேரம் பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement