Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Mar
பூம்புகார், ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் மீன்பிடி துறைமுகம் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை-: பூம்புகார், ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீன் வளத்தை மேம்படுத்தவும், மீன் பெருக்கத்துக்கான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாகை அடுத்த பனங்குடி மற்றும் நாகூர் முட்டம் கிராமங்களில் 85 ஏக்கரில் மீனவள பல்கலைக் கழகம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கவும், பதப்படுத்துதலுக்கும் வசதி இல்லாதது, சேமிப்பு சந்தை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் தடையாக உள்ளதை முதல்வர் ஜெயலலிதா அறிந்தார்.

இதைத் தொடர்ந்து நாகை, பழையாறு, பூம்புகார், ராமேஸ்வரம் அடுத்த மூக்கையூர் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், மீன்பிடி தொழில் அதிக அளவில் நடக்கும் நாகை மாவட்டம் பூம்புகாரில் ரூ.78.5 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிர்வாக ஒப்புதலும் முதல்வர் வழங்கியுள்ளார். துறைமுகம் அமைக்கும் பணியை விரைவாக தொடங்குவதற்காக முதல்கட்டமாக ரூ.6.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த துறைமுகம் அமைப்பதன் மூலம் பூம்புகார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீனவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement