ஆஸி. ஓபன் டென்னிஸ் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. நேற்று நட்சத்திர வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சும், சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவும் மோதினர். இந்த போட்டி 5 மணி நேரம் நீடித்தது. முடிவில் ஜோகோவிச் 1&6, 7&5, 6&4, 6&7(5/7), 12&10 என்ற செட்கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
இன்று பெண்கள் ஒற்றையர் 4வது சுற்று போட்டி
நடந்தது.இதில் உலகின் 10 வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும், ரஷ்யாவின் சொவ்ட்லானா குஸ்நட்சோவா ஆகியோர் மோதினர். இதில் குஸ்நட்சோவா 6&2, 2&6, 7&5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் போட்டியில் பிரான்சின் ஜூலியன் பென்னட்டுவா, எடோவட் ரோஜர் ஜோடியும், ஸ்பெயினின் டேவிட் மரிரோ, பெர்னான்டோ வெர்டாஸ்கோ ஜோடியும் மோதின. இதில் ஸ்பெயின் ஜோடி 6&7, 6&4, 6&4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது.