Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
09
Oct
கடும் மின்வெட்டால் உற்பத்தி பாதிப்பு காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருவள்ளூர்: தொடர் மின்வெட்டு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் 200க்கு மேற்பட்ட உற்பத்தி பிரிவுகள் இயங்குகின்றன.  7500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 10 நாட்களாக தொழிற்பேட்டையில் மின் விநியோகம் சீராக இல்லை. மின்சாரம் எப்போது வரும், எப்போது துண்டிக்கப்படுமென அறிவிக்கப்படவில்லை. மின்வெட்டு காரணமாக டையிங், ரசாயன பவுடர் தயாரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காக்களூர் தொழிற்பேட்டைக்கு தரப்பட்ட ஆர்டர்கள் அம்பத்தூர் தொழில்பேட்டைக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரை போல் சீரான மின்சாரம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட தொழில் மைய அலுவலகம் முன் காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நேற்று ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் துரை.சுந்தரேசன் தலைமை தாங்கினார். காக்களூர் தொழிற்பேட்டைக்கு தனி பீடர் லைன் தரவேண்டும், மின்சாரம் துண்டிப்பு பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், சங்க செயலாளர் பி.சந்திரசேகர், பொருளாளர் எஸ்.சதீஷ்குமார் மற்றும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement