20,20 தொடர் சமன் : தெ.ஆ.வுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து
இங்கிலாந்து , தென் ஆப்ரிக்கா மோதிய கடைசி 20,20 போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றிருந்தது. 2வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. எனவே கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலை இருந்தது. நேற்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 11 ஓவர்களாக ஆட்டம் மாற்றப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. தொடக்க வீரர் கீஸ்வெட்டர் 50 (32 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), பட்லர் 32 (10 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் எடுத்தனர். அதன்பிறகு விளையாடிய தென் ஆப்ரிக்காவால் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1,1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா 36, மோர்க்கல் 17, ஆன்டாங்க் 10 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். ஆட்டநாயகன் விருது பட்லருக்கும், தொடர் நாயகன் விருது கீஸ்வெட்டருக்கும் வழங்கப்பட்டது.