Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
10
Sep
பார்ட்டிக்கு போவதில்லை, மது குடிப்பதில்லை : பிரியா ஆனந்த்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: பார்ட்டிக்கு போகமாட்டேன். மது குடிக்க மாட்டேன் என்றார் நடிகை பிரியா ஆனந்த். சமீபத்தில் நடிகை சனா கான் பேட்டி அளித்தபோது, தென்னிந்திய நடிகைகள் சிலர் பார்ட்டிக்கு சென்று குடித்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள் என்று பேட்டி அளித்தார். இதற்கு த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரியா ஆனந்த் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திரையுலகில் எனக்கு ராணா, ஜாக்கி பகனானி போன்ற நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.  நலந்தா வே பவுண்டேஷன் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் படிப்புக்கு உதவி வருகிறேன். இதற்கு ராணா, ஜாக்கி போன்றவர்களும் உதவி உள்ளனர். எனது பிறந்த நாளை நான் கொண்டாடியதில்லை.

இம்முறை குழந்தைகளின் நலனுக்கு நிதி திரட்டுவதற்காக கொண்டாடினேன். என்னைப் பொறுத்தவரை நான் பார்ட்டிக்கு செல்வதில்லை. மது குடிப்பதும் இல்லை. எனது சக நடிகர்களுடன் எனக்கிருக்கும் நட்பு இதயபூர்வமானது. நான் செய்யும் நற்பணிக்கு அவர்கள் உதவியாக இருக்கிறார்கள். மற்றவர்களும் நற்பணி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். பிறந்த நாளோ, கல்யாண நாளோ எதைக் கொண்டாடினாலும் அது ஆதரவற்றவர்களுக்கு உதவும் விதமாக அமைத்துக்கொள்ள வேண்டும். கிராமத்தில் பிறந்த நான், தனி ஆளாக அமெரிக்கா சென்று படித்தேன். அதுபோல் மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர ஆசைப்படுகிறேன்.

இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். எனது கனவு கன்னியாக இருப்பவர் ஸ்ரீதேவி. அவருடன் நடித்தது மறக்க முடியாது. ஷூட்டிங் முடிந்து பிரியும்போது நான் அழுதுவிட்டேன். அதை எனது உதவியாளர் படம் பிடித்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். இவ்வாறு பிரியா ஆனந்த் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran