சாதனையுடன் தங்கத்தை சுட்டது அமெரிக்கா
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான ஸ்கீட் பிரிவில் 34 வயதான அமெரிக்காவின் கிம்பர்லி ரோட் 99 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். ஏற்கனவே இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 4 முறை பதக்கங்கள் வென்றுள்ளார். தொடர்ச்சியாக அவர் 5வது முறை யாக தற்போது சாதித்துள்ளார். இந்த பிரிவில் சீனாவின் நிங்வெயி வெள்ளியும், ஸ்லோவேக்கியாவின் டங்கா வெண்கலமும் வென்றனர்.