|
2012
27
Jul ![]() சென்னை: தசை சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறினார். மத்திய இணை அமைச்சர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது 14வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜீவன் பவுண்டேஷன் சார்பில் மயிலாப்பூரில் இன்று நடந்த முகாமில் நெப்போலியன், அவரது மனைவி ஜெயசுதா ஆகியோர் ரத்த தானம், உடல் தானம் செய்தனர். பின்னர் நெப்போலியன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவை பொறுத்த வரை 3 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை தசை சிதைவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். 5.5 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இந்த குறைபாட்டுக்கான அறிகுறி இரண்டு மூன்று வயதிலே ஓரளவு தெரியும். அப்போது இருந்தே நோயை கட்டுப்படுத்த தெரபி சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
Dr.B.vinoth kumar - TRICHY
12/15/2012 -- 9:8:25 நான் ( இயன்முறை பிசயோ) மருத்துவர் என்னுடைய ழ மருத்துவமனையில் தசை சிதைவு நோய், முளை வாதம், இரத்தம் உரையாமை நோய்கு இலவச சிகிச்சை அளிக்கிறோம் தொடர்புக்கு ... ழ இயன்முறை மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு மருத்துவமனை , உறையூர்,திருச்சி .... நன்றி .. டாக்டர். வினோத்... 9487839141.
|
|