திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் ஐடிஐ தகுதிக்கு வேலை : திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் டெக்னீஷியன், மெஷி னிஸ்ட், கெமிக்கல் ஆபரேட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், கேட்டரிங் அட்டெண்டென்ட் ஆகிய பிரிவுகளில் 58 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ. மேலும் விவரங்களுக்கு www.vssc.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 30.
இந்துஸ்தான் காகித ஆலையில் டெக்னீஷியன் :இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷனின் கீழ் செயல்பட்டு வரும் கேரளா, கோட்டயத்தில் உள்ள இந்துஸ் தான் நியூஸ்பிரின்ட் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல்,2, பிட்டர்,18, பாய்லர் அட்டெண்டென்ட்,5, ஆபரேட்டர் அனலைஸ்ட்,5 ஆகிய இடங்கள் காலியாக உள்ளன. 60 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. ஆபரேட்டர் அனலிஸ்ட் பணிக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி வேதியியல்.விவரங்களுக்கு www.hnonline.com இணையதளத்தை பார்க்கவும். கடைசிநாள்: ஜூலை 31.
அணுசக்தி துறையில் பயிற்சியுடன் வேலை
ஐடிஐ/டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தூரில் உள்ள Raja Ramanna Centre for Advanced Technology ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Stipendary Trainees: மொத்த இடங்கள் 21.
பிரிவு,அ. இயற்பியல்,8 இடங்கள். தகுதி: கணிதம்/வேதியியல்/ புள்ளியியல்/எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றை துணைப்பாடமாகக் கொண்டு குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல் பாடப்பிரிவில் பிஎஸ்சி.
ஆ. மெக்கானிக்கல், 5 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 3 வருட டிப்ள மோ அல்லது பிளஸ்,2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ
இ. எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேஷன், 4 இடங்கள். தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 3 வருட டிப்ளமோ அல்லது பிளஸ்,2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ.
ஈ. எலக்ட்ரிக்கல் , 4 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ.
பயிற்சி காலம்: 2 வருடம். ஊக்கத்தொகை: முதல் வருடம் ரூ.9,300 வீதம் வழங்கப்படும். வயது: 10.8.2012 தேதியின்படி 19லிருந்து 24க்குள்.
2. கேட்டகிரி, மிமி. மொத்த இடங்கள்: 15.
அ. எலக்ட்ரானிக்ஸ் /இன்ஸ்ட்ருமென்டேஷன்,5. ஆ. பிட்டர், 5, இ. எலக்ட்ரிக்கல்,5. தகுதி: கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைக் கொண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் /இன்ஸ்ட்ருமென்டேஷன்/பிட்டர்/எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் ஐடிஐ/என்சிவிடி சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம். வயது: 10.8.2012 தேதியின்படி 18லிருந்து 22க்குள். இந்தூரில் நடைபெறும் எழுத்து, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Administrative Office- III, Raja Ramanna Centre for Advanced Technology, Department of Atomic Energy, PO: CAT, Indore- 452 013.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.10.
தமிழக அரசு துறைகளில் நூலகர் பணி
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நூலகர் பணிக்கு தகுதியானவர் களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Librarian Grade (1 இடம்): சம்பளம்: ரூ.9,300,34,800. தகுதி: புள்ளியியல்/கணிதம்/பொருளாதாரம் ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்து பி.எல்.ஐ.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
2. Librarian Grade (1 இடம்): தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் பிஎல்ஐஎஸ்சி பட்டம்
3. Librarian: 24 இடங்கள். சம்பளம்: ரூ.5,200,20,200. சம்பளம்: ரூ.5,200,20,200. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் பிஎல்ஐஎஸ்சி அல்லது நூலகத் துறையில் டிப்ளமோ
4.Assistant Librarian : 1இடம். தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் பிஎல்ஐஎஸ்சி அல்லது நூலகத்துறையில் டிப்ளமோ.
5.Librarian: 1 இடம். தகுதி: டிகிரியுடன் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு.
6.Librarian: 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வுக்கட்டணம்: ரூ.150/, தலைமை தபால் நிலையங்கள் அல்லது இந்தியன் வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 25.
மத்திய போலீஸ் படையில் 1524 டிரேட்ஸ்மேன் இடங்கள்
மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) போலீஸ் படையில் குரூப் ‘சி’ டிரேட்ஸ்மேன் பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த காலியிடங்கள்: 1524. இவற்றில் சமையல்காரர், 490, சலவை யாளர்,367, முடிதிருத்துனர்,38, சபைவா லா,262, வாட்டர்மேன்,211, வெயிட்டர்,42, கார்பென்டர்,27, பெயின்டர்,23, டெய்லர்,19, காபியர்,37, கார்டனர்,8 என ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பளம்: ரூ.5,200,20,200 மற்றும் தர ஊதியம் ரூ. 2 ஆயிரம் மற்றும் இதர படிகள். வயது: 9.8.2012ன் படி 18லிருந்து 23க்குள். தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட பணி அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருடம் அல்லது 2 வருட ஐடிஐ சான்றிதழ். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பரிசீலனை, உடல்தகுதி அளவிடுதல், உடல் திறன் தேர்வு, எழுத்து தேர்வு, டிரேடு தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.50/,ஐ Accounts Officer, FRR HQ, Patna, Bihar என்ற பெயரில் பாட்னா ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (கோடு எண்: 0152) மாற்றத்தக்க வகையிலும் போஸ்டல் ஆர்டர் எடுக்க விரும்புகிறவர்கள் Accoumts Officer, FTR HQ, SSB, Patna, Bihar என்ற பெயரிலும் எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ssbrectt.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Inspector General, FIR HQ (SSB), Patna, Rukanpura House, Baily Road, Patna, Bihar 800 014. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.9.