Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
16
Jul
டெசோ மாநாட்டுக்கு மத்திய அரசு நெருக்கடி தரவில்லை : கருணாநிதி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டி: டெசோ மாநாட்டை பற்றி சில கட்சிக்காரர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ள கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டி உள்ளது. அதற்காக மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்கு அனுப்பிய மைய கருத்தை உங்களுக்கு வழங்குகிறேன். இந்த மாநாட்டில் சரத்பவார், சரத் யாதவ், பரூக் அப்துல்லா, ராம்விலாஸ் பஸ்வான், நைஜீரிய நாட்டு அமைச்சர் மூசா அகமது மற்றும் சுவீடன், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எம்.பி.க்கள் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டில், தனி ஈழம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

ப: தனி ஈழம் பற்றிய கருத்து இருக்கிறது. அதற்காக கிளர்ச்சி நடத்தும் உத்தேசம் இல்லை. ஆயுத போராட்டத்துக்கு பிறகு எஞ்சியுள்ள இலங்கை தமிழர்களை பாதுகாப்பதும் அவர்களின் வாழ்வுரிமைகளை வளப்படுத்துவதும் போர் இன்னல்களை களைவதும் தான் இப்போதைய நிலை. இதற்கு நடவடிக்கை எடுக்க எப்படி ஆதரவு கோரலாம் என்பது பற்றி மாநாட்டில் பங்கேற்போர் தெரிவிக்கும் கருத்து அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதுதான் எங்கள் திட்டம்.

தனி ஈழம், மாநாட்டின் மைய கருத்து என்று கூறினீர்கள். இப்போது மாற்றுகிறீர்கள். மத்திய அரசின் நெருக்கடி இருக்கிறதா?

எந்த நெருக்கடியும் இல்லை. நீங்களாக கற்பனை செய்யாதீர்கள்.

போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவீர்களா?

போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் வேறுபட்ட கருத்து இல்லை

விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதே?

அதுபற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

சிதம்பரம் உங்களிடம் டெசோ மாநாடு பற்றி பேசினாரா?

அதுபற்றி எதுவும் பேசவில்லை.

டெசோ மாநாட்டில் தனி ஈழம் என்பதற்கு ஆதரவு இல்லை என ஞானதேசிகன் கூறியிருக்கிறாரே?

ஞானதேசிகன் அவசரப்பட்டு கூறுகிறார் என்று கருதுகிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேச முடியும். ஆனால், அவர் மாநாடு பற்றி அறிந்துகொள்ளாமல் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

என்னுடைய நிறைவேறாத ஆசை தனி ஈழம் என்றீர்களே?

அதை எப்போதும் சொல்வேன்.

தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பு பற்றி இந்த மைய கருத்து குறிப்பில் இல்லையே?

மாநாட்டில் பங்கேற்பவர்களின் கருத்துகளை அறிந்து முடிவெடுப்பதுதான் ஜனநாயகம். தனி ஈழத்துக்காக போராட்டம், கிளர்ச்சி எதுவும் இல்லை. இப்போது அவர்களுக்கு ரணத்தை ஆற்றுவதும் பசியை போக்குவதும் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவதுதான் தேவையானதாகும்.

சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறதே?

நாங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.

டெசோ மாநாட்டுக்கு காங்கிரசை அழைப்பீர்களா?

எல்லோரையும் அழைப்போம்.

தனி ஈழம் கூடாது என்று ஏதாவது நெருக்கடி வந்ததா?

நான் எந்த நெருக்கடிக் கும் பயப்பட மாட்டேன்.

விடுதலைப்புலிகள் அழிந்த நிலையில் தொடர்ந்து தடை தேவையா?

அதுபற்றி மாநில அரசுதான் கவலைப்பட வேண்டும்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை முன்னாள் எம்எல்ஏ வசந்தகுமார் வழங்கினார். அருகில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் மற்றும் ஆதிநாராயணன், வில்லிவாக்கம் சுரேஷ், கக்கன் உள்ளிட்டோர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,