தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்
புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் அறிவிக்கப் பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஹமீத் அன்சாரி கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பாஜ கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று காலை டெல்லியில் அத்வானி வீட்டில் ஆலோசனை நடத்தினர். இதில் பாஜவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனை பாஜ மூத்த தலைவர் அத்வானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தேர்தலில் போட்டியிட ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் மறுத்துவிட்டதாகவும் அப்போது அவர் கூறினார்.