திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட செயலாளர் அ.பாலசிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்தமிழன், சித்தார்த்தன், அருண் கவுதம், மோகனசுந்தரம், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் கவுதசன்னமா, நீலவானத்து நிலவன், திராவிட மணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கட்சித் தலைவர் திருமாவளவன் பொன்விழாவை முன்னிட்டு புதிதாக தொலைக்காட்சி தொடங்குவதற்கு முதல் தவணையாக 502 கிராம் பொற்காசுகள் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 2,வது தவணையாக ஆகஸ்ட் 12,ம் தேதி தொண்டர்கள் ஒருவரும் தலா ஒரு கிராம் தங்க காசு வழங்க வேண்டும். முகாம் பொறுப்பாளர்கள் மாநாடு நடத்தி, ஒவ்வொரு முகாமிலும் 50 மரக்கன்றுகள் நட வேண்டும். தலித் அல்லாதவர்கள் கட்சியில் இணைவதை வரவேற்று அந்த பகுதியில் கல்வெட்டு திறக்க வேண்டும். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். ஆகஸ்ட் 1,ம் தேதி வளசரவாக்கம், மதுரவாயல் பகுதி சார்பில் 50 பவுன் பொற்காசு, கடம்பத்தூர் ஒன்றியம் சார்பில் 50 பவுன் வழங்க வேண்டும்.