சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா திருவாரூரில் நாளை துவக்கம்
திருவாரூர் :கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா குழு தலைவர் சுவாமிநாதன் கூறியது: திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயில் சன்னதியில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு மும்மூர்த்திகள் விழா நாளை துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 நாட்கள் நடைபெறும் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்களும் பங்கேற்று இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.