Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
31
Mar
ஆசிட் ஊற்றி ராமஜெயம் கொலை?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சி :முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சியில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் (52). இவர் நேற்று முன்தினம் திருச்சி தில்லைநகர் 10வது கிராசில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உதவி கமிஷனர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த 29ம் தேதி அதிகாலை 5.15 மணி முதல் 5.30க்குள் தில்லைநகர் ரோடு மற்றும் சாஸ்திரி ரோடு ஆகிய பகுதிகளுக்கு வந்து சென்ற வாகனங்கள் குறித்து கோஹினூர் ஜங்ஷன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் வாகனங்களின் அடையாளங்கள் மட்டுமே தெளிவாக தெரிந்தது. அவற்றின் பதிவு எண்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள சில கேமராக்கள் மின்வெட்டு காரணமாக செயல்படாமல் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராமஜெயம் உடல் கிடந்த திருவளர்ச்சோலை பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பதிவான செல்போன் உரையாடல்களை திரட்டியுள்ள போலீசார் அவற்றை கொண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது இறுதியாக 11 செல்போன் எண்களின் உரையாடல்கள் சந்தேகத்திற்குரியவையாக கருதப்பட்டன. அந்த நம்பர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவ்வழியாக சென்றவர்களின் உரையாடல்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் ராமஜெயம் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவரது முகம் மற்றும் கை கால்கள் நேற்று முன்தினம் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பு நிறத்தில் மாறத்துவங்கின. இந்த விஷயம் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்ததை  பார்க்கும் போது அவருக்கு விஷம் அல்லது ஆசிட் ஊற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. மேலும் அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றும் போது கழுத்து நெரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு பிரேத பரிசோதனை அறிக்கையில் விடை தெரியும் என போலீசார் கூறினர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement