Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
29
Mar
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ15 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் கேமரா, ஐபாட் மீட்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மீனம்பாக்கம் :சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் கேமரா, ஐபாட் போன்றவை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவில் மின்சாதன பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், நேற்று மாலை முதலே சிங்கப்பூரில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது குரேஷி (38), சபிபுல்லா (42) ஆகியோர், 2 சூட்கேஸ் மற்றும் 2 பெரிய பார்சல்களுடன் வந்தனர்.

அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சூட்கேஸ், பார்சல்களை சோதித்தனர். ஏராளமான டிஜிட்டல் கேமரா, ஐபாட், வீடியோ கேமரா, செல்போன்கள், மெமரி கார்டுகள் போன்றவை இருந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்து விசாரித்தபோது, இவர்களை ஒரு சில வியாபாரிகள், கிள்ளுக்கீரையாக பயன்படுத்தி பொருட்களை கடத்தி வர இருப்பது தெரிந்தது. இவர்களை அனுப்பி வைத்த மற்ற கடத்தல்காரர்களை சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement