Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
04
Mar
கடன் தொல்லை தீர என்ன வழி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்முடைய இந்த பிறவி பயன், பலன் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொறுத்தே உள்ளது என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தம். ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த ஸ்தானத்தில் இருந்துதான் மற்ற அமைப்புகளை கணக்கிடுகிறோம். லக்னம் ஒன்றாம் இடம். இதற்கு அடுத்த வீடு தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம். இந்த வரிசையில் ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாமிடமும், ஆறாம் அதிபதியுமே கடன் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியவர். பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துவிடுகிறது. ஒரு சில மகா பாக்கியவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுபவிரயமும், அசுபவிரயமும் அடக்கம். மகன், மகள் கல்வி செலவு, பிள்ளைகள் திருமணம், வியாபாரம், தொழில், வழக்குகள், ஆடம்பர வாழ்க்கை, மருத்துவ செலவுகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள். பலருக்கு கடைசி வரை ஏதாவது உருட்டல், பிரட்டல் இருந்து கொண்டே இருக்கும். சிலர் கடன் தொல்லையால் தவறான முடிவுகளுக்கு சென்று விடுகிறார்கள். சொத்துக்களை இழந்து தெருவுக்கு வரும் அளவுக்கு கிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன.

கடன் ஏற்பட காரணம் பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கை காரணமாக கடன் ஏற்படும். தனகாரகன் குரு, தனஸ்தான கிரகம் பலம் குறைந்து நீச்சம் பெற்று 6, 8, 12ல் மறைந்தால் பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனாலும் அந்தந்த காலகட்டங்களில் வரும் திசா புக்திகள்தான் கடன் சுமை பிரச்னை அதிகமாவதற்கு காரணம். ஆறாம் அதிபதியுடன் சேரும் கிரகங்கள் மூலம் கடன் பிரச்னைகள் ஏற்படும். ஆறாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் குடும்ப செலவு, சுப விஷயத்துக்காக கடன் வாங்க நேரிடும். மூன்றாம் அதிபதி சம்பந்தப்பட்டால் சகோதரர்களால் பணவிரயம் ஏற்படும். நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டால் நிலம், விவசாயம், உடல்நலக் குறைவு, தாய் மூலம் பணம் செலவாகும். ஐந்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் கல்யாணம், கல்வி வகையில் கடன் ஏற்படும். ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டால், மனைவி, நண்பர்கள் மூலம் செலவுகள் இருக்கும். எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் வீண் செலவுகள் வரலாம். அதே நேரத்தில் திடீர் யோகத்துக்கும் இடமுண்டு. ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். தந்தையால் செலவுகள் இருக்கும். பத்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் மூலம் கடன் ஏற்படும்.

கடன் தீர பரிகாரம்

கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை  செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால்  பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும்.  சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக... இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்.   ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
கீதா - சேலம்
10/17/2012 -- 8:46:5

கடன் தொல்லை தீர நல்ல வழி சொன்னிர்கள்,நன்றி

can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

kirthiga - coimbatore
5/30/2013 -- 15:7:31

சார் என் பர்த்டே தேதி 25.07.1984 11.20 என் திருமனதேதி 04.12.2003 என் கணவர் பர்த்டே ட்டே 12.5.1975என் கணவரும் நானும் ஒற்றுமைஇன்ரி வாழ்கிறோம் பிரிந்துவிடுவோம் என பயமாக இருக்கிறது வலி சொல்லுங்கள்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement