Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2011
31
Jul
அரங்கனை காதலித்த ஆண்டாள்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோதை என்றும் ஸ்ரீஆண்டாள் என்றும் திருநாமங்களால் வணங்கப்படும் சாட்சாத் ஸ்ரீதேவியின் அம்சமாகிய பூமி பிராட்டியார், அவதார விசேஷம் காரணமாக ஆடி மாதம், நள வருடம் சுக்ல பட்சம் சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியில், ‘திருத்துளாய்’ என்று சொல்லப்படும் துளசி செடியின் அடியில் அவதாரம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழும் குரல் கேட்டது. அருகே சென்று பார்த்தார். துளசி செடியின் அடியில் அழகிய பெண் குழந்தை. ஆச்சர்யத்துடன் கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்தம் அடைந்தார். ‘கோதை’ என்று பெயர் சூட்டி தனது மகளாக கருதி வளர்த்து வந்தார்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கோதைக்கு அரங்கனின் மீது பக்தியும், காதலும் அதிகரித்தது. சகல சாஸ்திர ஞானங்களையும் கற்று தேர்ந்தாள். பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் பரந்தாமன் மீது பாடினாள். இதற்கிடையில் பக்தி தீவிர காதலாக மாறியது. கண்ணனை தன் மணாளனாகவே நினைத்து கனவிலேயே காதல் செய்து வந்தாள். ஒரு கட்டத்தில் அரங்கனையே மணப்பது என்ற உறுதியும் பூண்டாள்.
தினமும் மாலை கட்டி பெருமாளுக்கு சாற்றுவது பெரியாழ்வாரின் வழக்கம். அந்த திருப்பணியை அவர் செவ்வனே செய்து வந்தார். ஒருநாள்.. அந்த மாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. ‘அட.. என் மனதுக்கு பிடித்தவன் அணியப்போகும் மாலையாயிற்றே இது. நான் அணிந்துவிட்டு கொடுத்தால் என்ன’ என்று நினைத்தாள். மாலையை எடுத்தாள். அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். அப்பாவுக்கு பயந்து, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள். பெரியாழ்வார் தொடுத்து வைப்பதும்.. அதை கோதை அணிந்துகொண்டு எடுத்து வைப்பதும் தினமும் தொடர்ந்தது.

ஒருநாள், வெளியே சென்றுவிட்டு அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார் பெரியாழ்வார். பெருமாளுக்கான மாலையை கோதை சூடிக்கொண்டிருப்பதை பார்த்து பதறிவிட்டார். ‘‘அபசாரம், ஆண்டவனுக்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடலாமா’’ என்று கடிந்துகொண்டார். வேறொரு மாலை தொடுத்து பெருமாளுக்கு சாற்றினார். அன்று இரவு.. பெரியாழ்வார் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரது கனவில் அரங்கன் தோன்றினான். ‘‘கோதை என் மீது மிகுந்த பிரியமும், பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னவாயிற்று?’’ என்று கேட்கிறார்.

பரந்தாமனே இப்படி கேட்டதில் பெரியாழ்வாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். கோதையின் பக்தியை உணர்கிறார். பக்தியாலும் அன்பாலும் பரமனையே அவள் வசப்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். பகவானின் உள்ளத்தையே ஆண்ட கோதையை அன்று முதல் ‘ஆண்டாள்’ என்ற திருநாமம் வைத்தே அழைக்கிறார் பெரியாழ்வார். பெருமாளின் விருப்பத்துக்கு ஏற்ப, அவள் சூடிக் கொடுக்கும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வந்தார்.
பகவான் மீது ஆண்டாள் வைத்திருக்கும் அன்பும் காதலும் மேலும் அதிகரித்து வந்தது. அரங்கனையே மணம் முடிக்க திருவுள்ளம் கொண்டாள் ஆண்டாள். அப்பாவிடம் சொல்கிறாள். இதை கேட்டு அவர் பதறுகிறார். ‘‘பெருமாள் மீது பக்தி, அன்பு, பாசம் வைக்கலாம். அவனை காதலிப்பதும் மணம் முடிப்பதும் சாத்தியமா?’’ என்று கேட்டு கதறுகிறார். மனதை மாற்றிக் கொள் என்று சொல்லி மகளிடம் கண்ணீர் வடிக்கிறார்.

‘‘அரங்கன்தான் என் மணாளன். அதில் மாற்றம் இல்லை’’ என்று உறுதியாக கூறுகிறாள் ஆண்டாள். அவளது பக்தியை நினைத்து மகிழ்வதா, அவளது எதிர்காலத்தை நினைத்து வருத்தப்படுவதா? என்ற கலக்கத்திலேயே உறங்க செல்கிறார். கனவில் மீண்டும் தோன்றுகிறான் அரங்கன். ‘‘ஆண்டாள் விருப்பப்படியே திருவரங்கத்துக்கு அழைத்து வா’’ என்று சொல்லி மறைகிறான். அரங்கநாதன் சொல்லிவிட்டான். ஆனாலும், பெரியாழ்வாருக்கு சந்தேகம் தீரவில்லை. நிஜமாகவே ஆண்டாளை சுவாமி கல்யாணம் செய்துகொள்வாரா, கனவில் வந்தார் என்று சொன்னால் யாரும் சிரிக்கமாட்டார்களே.. என்றெல்லாம் அவருக்குள் ஆயிரமாயிரம் சந்தேகங்கள். தயக்கத்துடன் ஆண்டாளுடன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.

ஊர் எல்லையில் ஏராளமான வேத விற்பன்னர்கள், பொதுமக்கள். திரளாக கூடியிருப்பவர்களை பார்த்ததும் ஏதோ திருவிழா என்று நினைக்கிறார் பெரியாழ்வார். வந்திருப்பது பெரியாழ்வாரும் ஆண்டாளும் என்று தெரிந்துகொண்டதும் வேத விற்பன்னர்களும் கோயில் முக்கியஸ்தர்களும் ஓடோடி வந்து வரவேற்று வணங்குகிறார்கள். ‘‘தன்னை மணந்துகொள்ள சாட்சாத் மகாலட்சுமியே வருவதாக எங்கள் கனவில் அரங்கநாத பெருமான் நேற்று சொன்னார். மகாலட்சுமியை வரவேற்கத்தான் திரண்டிருக்கிறோம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை பெருமாள் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பதால் கல்யாண வைபவத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.

அரங்கனின் திருவுளத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறார் பெரியாழ்வார். அன்பும் காதலும் பெருக்கிட, ‘ரங்கநாதா’ என்று கூறியபடியே கருவறைக்குள் ஓடுகிறாள் ஆண்டாள். அங்கேயே ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள். ஆடிப்பூர நாயகியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை நமக்கு தந்தருளியுள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில்  உணர்த்தியிருக்கிறார். திருப்பாவையில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்து பாடல்களும் திருமண பாடல்கள் ஆகும். இப்பாடல்களை பக்தியுடன் படிப்பதால் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி சுபமங்கள பிராப்தம் கூடி வரும்.

ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். கோயில்களில் அம்மன், அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள். பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களையும் சாற்றிவிட்டு மறுநாள் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை மனமுருக பிரார்த்தித்து இறைவன் அருளும், சகல வளங்களும், நீங்காத செல்வமும் பெறுவோமாக.
 மிதுனம் செல்வம்

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement