Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2017
12
Jan
நியூஸ் ரூம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கின்னஸ் சாதனை படைக்கும் நாய்

ஜப்பான் நாட்டை சேர்ந்த 11 வயது பீகில் இன நாய் ஒன்று தனது உரிமையாளர் மகோடா குமாகையுடன் சேர்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அந்த சாதனை என்ன தெரியுமா? 1 நிமிடத்தில் 58 முறை ஸ்கிப்பிங் செய்துதான் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இருவரும் சேர்ந்து 1 நிமிடத்தில் 51 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்திருந்தனர். அந்த சாதனையை தற்போது இவர்களே முறியடித்துள்ளனர். ‘புரின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நாய், உரிமையாளர் மகோடா வீசிய 14 மினி புட்பால்களை கோல் விழாமல் தடுத்தது, ஒரு பந்தின் மீது நின்று 10 மீட்டர் தூரத்தை 10.39 விநாடிகளில் கடந்தது என இதற்கு முன் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்திருக்கிறது.   புரின் அடுத்து செய்யப்போகும் சாதனையைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மாடுகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை

மாட்டுப்பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்க பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் நெட்டி மாலைகள் அணிவிக்கப்படும். இந்த மாலைகள் தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த திப்பிராஜபுரத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. 60 குடும்பங்களுக்கு மேல் நெட்டிமாலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், ‘இந்தாண்டு வறட்சியால் தேவையான நெட்டிகோரை எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் 20 முதல் 30 ஆயிரம் மாலை தயாரிப்போம். இந்தாண்டு 8 ஆயிரம் மாலைகள்கூட செய்ய முடியவில்லை. கார்த்திகை மாதம் மாலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட தொடங்கி மார்கழி 20ம் தேதிக்குள் முடித்து விடுவோம்.

இந்தாண்டு ரூபாய் நோட்டு பிரச்னை, கடும் வறட்சியால் மாலை தயாரிப்பு தடைபட்டது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கும் பாலீதின் பேப்பர்களில் மாலை தயாரிக்கின்றனர். இவற்றை அணிவிக்கும்போது அந்த மாலைகளை மாடுகள் தின்பதால், இரைப்பையில் இவை தங்கி உயிர் இழக்க நேரிடும். பாலிதீன் வகை மாலைகளை தயாரிக்க தமிழக அரசு தடைவிதித்து பாரம்பரிய நெட்டிமாலை தொழிலை அரசு காப்பாற்ற வேண்டும்’ என்றனர்.

மழலை ஸ்டார் ஜோடிகள்

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யா, ஆமிர்கான் மகன் அஸாத். இந்த இரு குழந்தைகளும் மும்பையில் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கின்றனர். சமீபத்தில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. இதில் குழந்தைகள் அஸாத், ஆராத்யா இருவரும் ேஜாடியாக மேடையில் தோன்றி நடனம் ஆடினர். ஐஸ்வர்யாராய், அபிஷேக், ஆமிர்கான் மூவரும் முன்வரிசையில் அமர்ந்து தங்கள் குழந்தைகளின் நடனத்தை கைதட்டி ரசித்தனர். பிறகு குழந்தைகளுடன் மூவரும் மேடையில் தோன்றினார்கள். அப்போது அவர்கள் நடித்த படங்களிலிருந்து பாடல்கள் இசைக்கப்பட்டது. அதற்கு ஏற்ப மூவரும் ஆடினார்கள்.


பாச நாய்க்கு இறுதி ஊர்வலம்

மத்திய பிரதேசம் மாநிலம் சிஹோர் பகுதியை சேர்ந்தவர் ராம்பரோஸ். இவர் பாசமாக வளர்த்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, நாய்க்கு அதன் உரிமையாளர் இறுதி ஊர்வலம் நடத்தினார். மாலைகள் அணிவித்து மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது, பேசிய ராம்பரோஸ், ”இந்த நாய் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர். நான் எங்கு சென்றாலும் பின்னாலே வரும். மிகவும் பாசமாக வளர்த்து வந்தோம். இப்பொழுது இது எங்களைவிட்டு பிரிந்துவிட்டது. அதன் பிரிவை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார். பின்னர் சிறிய தள்ளுவண்டி வாகனத்தில் மலர் மாலைகளுக்கு நடுவே மீளா துயிலில் பாச நாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


வறட்சிப்பொங்கல்: விவசாயிகள் விரக்தி
 

‘மணப்பாறை மாடு கட்டி...’ பாடலை முணுமுணுக்காதவர்கள் குறைவு. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பிரசித்திபெற்ற மாட்டுச்சந்தை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி மறுநாள் புதன்கிழமை மதியம் 2 மணி வரை நடைபெறும். தற்போது கடும் வறட்சியால் போதிய தீவனம் கிடைக்காமல் கால்நடைகளை வளர்க்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆசையாக, பாசமாக வளர்த்து வந்த மாடுகளையும் விற்கவேண்டிய சூழல். இந்தாண்டு தைப்பொங்கல் விவசாயிகளுக்கு வறட்சிப் பொங்கல்தான். பொங்கலுக்கு முந்தைய சந்தையில் மாட்டுப் பொங்கலுக்காக மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு கொம்புகளுக்கு வண்ணக்கலர் பெயின்ட் பூசியும், புதிய கயிறுகள் அணிவித்தும் மாடுகளை அழகுபடுத்துவர். ஆனால் பொங்கலுக்கு முந்தைய சந்தையாக நேற்று நடந்த சந்தையில் மாடுகளுக்கு புதிய கயிறு வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாட்டு சந்தை களையிழந்து காணப்பட்டது.

துறையூர் தம்மம்பட்டியை சேர்ந்த கோபி கூறுகையில், ‘ஒருபுறம் வறட்சி, மறுபுறம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மாடுகளை வளர்க்கவும் முடியவில்லை, விற்கவும் முடியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடையால் கன்றுகுட்டிகள் கேரளாவிற்கு அடிமாட்டுக்கு சென்றன. இதை பார்த்து நான் ஒரு கன்றுக்குட்டியை 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். அதை வீட்டில் வளர்க்க உள்ளேன். நாங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஒவ்வொரு நாளும் எங்கள் குழந்தைகளைப்போல சிறப்பாக கவனித்து வருகிறோம். ஜல்லிக்கட்டுக் காளைகள் கேரளாவிற்கு சென்று இறைச்சியாக ஆகலாம். அதை விலங்குகள் வதை தடுப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஒருநாள் நடைபெறும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வது எந்த விதத்தில் நியாயம்?’ என்றார். ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும் என்ற ஆர்வத்தில் மக்கள் உள்ளனர். இதனால் நேற்று ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனைக்கு மாட்டு சந்தைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement